Categories
மாநில செய்திகள்

“தங்கம் வென்று நம் தேசத்திற்கு சகோதரி பெருமை சேர்த்துள்ளார்” – தமிழிசை வாழ்த்து ..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Image result for Elavenil Valarivan

இந்நிலையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கடலூரை சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்… பாராட்டுக்களும்…” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |