முதியவர்களான தம்பதியினரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல் பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுலோசனா என்ற மனைவி உள்ளன. இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணி சேலத்தில் வசித்து அங்கே இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து திருமணமாகி இவர்களின் குழந்தைகள் வெளி ஊர்களில் வசித்து வருவதால் கணவன் மற்றும் மனைவி 2 பேரும் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அமைத்திருக்கும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
அதன்பின் இரவு நேரத்தில் அவர்கள் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ளர். அந்நேரம் வீட்டின் பின்புறமாக சத்தம் கேட்டதால் 2 பேரும் எழுந்து போய் பார்த்துள்ளனர். அப்போது அங்கே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் கணவன் மற்றும் மனைவி 2 பேரையும் திடீரென தாக்கியுள்ளனர். பிறகு அந்த நபர்கள் கிருஷ்ணன் கழுத்தில் கூர்மையான கத்தி கொண்டு குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனது கணவனை காப்பாற்ற முயன்ற சுலோச்சனாவையும் தலையில் அடுத்ததால் கீழே மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து காலை நேரத்தில் தோட்ட வேலைக்காக வந்த தொழிலாளர்கள் கணவன் மற்றும் மனைவி 2 பேரும் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று 2 முதியவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.