காப்பகத்தில் சேர்த்ததினால் முதியவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்பிய சின்ன குழந்தை 1-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான முதியோர் காப்பகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் அந்த காப்பகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தன்னுடைய அண்ணன் கோவிந்த ராமனை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனால் மனமுடைந்து இரவு நேரத்தில் கோவிந்த ராமன் காப்பகத்தில் உள்ள குளியலறையில் தான் கட்டியிருந்த வேட்டியை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விசாரணையின் போது கோவிந்த ராமனுக்கு இரண்டு மகன்கள் உள்ளன என்பதும் 25 வருடங்களுக்கு முன்பாக கணவர் மற்றும் இரண்டு மகன்களையும் பரிதவிக்க விட்டு கோவிந்தராஜனின் மனைவி இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு கோவிந்த ராமன் தனது இரண்டு மகன்களையும் கஷ்டப்பட்டு ஆளாக்கி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்பின் கோவிந்த ராமனின் மகன்கள் இருவருமே அவரை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் கோவிந்தராஜன் தனியாக வசித்து வந்த நிலையில் வயது முதிர்வு அடைந்த காரணத்தால் தனது தம்பி குமார் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளார். ஆனால் குமாராளும் தனது அண்ணனை சரிவர கவனிக்க முடியவில்லை என்பதால் கோவிந்தராமனை முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் வளர்த்து ஆளாக்கிய தனது மகன்கள் இருவரும் கைவிட்டதினாளும் வயதான காலத்தில் தன்னை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் முதியோர் காப்பகத்தில் வந்து தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எண்ணி மன உளைச்சலில் இருந்த கோவிந்த ராமன் சில நாட்களாக காப்பகத்தில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.