Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கொரோனா….. கணவர் தூக்கிட்டு தற்கொலை…. தர்மபுரி அருகே சோகம்…!!

தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக பணிபுரிந்து வரும் அந்த முதியவருக்கு தெரியாது.

பின் எப்போதும் போல் பணி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பின் மனைவிக்கு கொரோனா அறிகுறி இருப்பதும், அவர் தனிமைபட்டிருப்பதையும் அறிந்த அவர் மிகவும் மனமுடைந்து வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் காவலாளிக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், முதற்கட்டமாக காவலாளி கொரோனா பயம் வந்ததன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |