Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த மாதிரியான ஆளுங்களை….. கட்சியிலும்…. தேர்தலிலும் அனுமதிக்க கூடாது…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

குற்றபின்னணியில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடமும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறுவது வேதனையை தருகிறது. இது தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடிய செயலாகும்.

எனவே எதிர்வரும் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும்,  தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்றும்  உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில்  உள்ள பிளாக் பிரபல ரவுடி ரவி பாஜகவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தை முன்வைத்து சமூக ஆர்வலர்கள் 35 வழக்குகள் நிலுவையில் உள்ள இந்த நபரை கட்சியில் தொடர்ந்து பாஜக நீட்டிக்க போகிறதா? அல்லது உயர்நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்கப்போகிறதா?  என்பது உள்ளிட்ட விவாதங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. 

Categories

Tech |