இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கட்சி அலுவலகம் தொண்டர்களின் வருகையால் கலை கட்டியுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று காலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் இன்று அதிகாலை 3:00 மணி வரை ஆலோசனை நடத்தினர். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பும் கூட முதலமைச்சருடன் இரு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில் ராயப்பேட்டை சாலை வழி நெடுகிலும் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரின் போஸ்டர்கள் வருங்கால முதல்வரே என்ற வாசங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன. கட்சி தலைமையகத்தில் அதிமுக தொண்டர்களும் குவிந்தவண்ணம் உள்ளனர். எனவே அதிமுக தலைமைச் செயலகமானது விழாக்கோலம் பூண்டுள்ளது . அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொண்டர்கள் புலி வேஷமிட்டு கோஷமிட்டபடி உள்ளனர்.முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் தொண்டர்களால் கட்சி அலுவலகம் தற்போது கலைக்கட்டியுள்ளது.தொண்டர்கள் அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.