பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த தேர்தலை அந்நாட்டின் அதிபர் ரத்து செய்த நிலையில் தற்போது அங்குள்ள மேற்கு கரைப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது.
பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மேல் குறிப்பிட்டுள்ள இரு தேர்தலையும் அந்நாட்டின் அதிபரான மஹமூத் அப்பாஸ் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்திலுள்ள மேற்கு கரை பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 154 கிராம கவுன்சிலுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தகுதியாகியுள்ளார்கள்.
இதனையடுத்து ஏராளமானோர் மிகவும் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை இந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவு செய்துள்ளார்கள்.