Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: கோவாவில் பாஜக-காங்கிரஸ் கடும் போட்டி…. திணறும் ஆம் ஆத்மி…!!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது.

கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில், 37 இடங்களுக்கு பாஜக 13 இடங்களில், காங்கிரஸ் 15 இடங்களிலும், ஆம் ஆத்மி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |