உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, பஞ்சாபில் அறுதிப் பெரும்பான்மையை தாண்டி (88/177) பீடு நடை போட்டுக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மி முதன் முறையாக அங்கு கால் பதிக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் முன்னணி தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், பஞ்சாபில் நேர்மறையான போக்கு நிலவி வருவதை நாம் காணமுடிகிறது என்றார். மேலும் மாற்றத்திற்காக வாக்களித்த பஞ்சாப் மக்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.