Categories
அரசியல் மாநில செய்திகள்

#Election Breaking: 144 தொகுதிகளில் ஏறுமுகம்…. புதிய சாதனையை நோக்கி பாஜக…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

பிற்பகலுக்குள் இரு மாநிலங்களிலும் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்பது தெரியவரும். உபி, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முலாய் சிங்கம் மறைவால் நடைபெற்ற மொய்பூரி மக்களவைத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, குஜராத்தில் தொடர்ந்து 7வது வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.

182ல் 144 தொகுதிகளில் முன்னிலை இருப்பதால், அக்கட்சி புதிய சாதனை நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிறகு பாஜகவே தொடர்ச்சியாக 7வது முறையாக மாநில தேர்தலில் வெற்றிபெற இருக்கிறது. முன்பாக மேற்குவங்கத்தில் 1977 – 2011 காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 34 வருடங்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |