பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தது. இருப்பினும் தேர்தல் பணிகள் அனைத்தும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் முழுவீச்சில் தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மொத்தம் 45 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது.
அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 33 தொகுதிகளுக்கும், பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகள் அகதிகளுக்கானவை என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் களத்தில் 700-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். அதில் சுயேச்சை வேட்பாளர்கள் 316 பேர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.