வாக்காளர் அடையாள அட்டையை அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலரும் கலெக்டர் சண்முகசுந்தரமும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி e-EPIC என்ற புதிய சேவை மூலம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை அவரவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படி பதிவிறக்கம் செய்யும் வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் செல்லத் தக்கதாகும். QR code மூலம் வாக்காளர் பட்டியல், வரிசை எண், வாக்காளர் பெயர், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களையும் பெற முடியும்