Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 880000 பறிமுதல் “தேர்தல் பறக்கும் படை அதிரடி !!…

திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்காகவும் மேலும் அதிக அளவில் பணம் பட்டுவாடா என்பது நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருத்தணியை அடுத்துள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் . அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு காரில் இருந்த நபரிடம் இருந்து ரூபாய் 88,000 பறிமுதல் செய்யப்பட்டது இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த தேர்தல் பறக்கும் படையினர் விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் என்பதையும் அவர் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகிஸ்தர் என்பதையும் கண்டறிந்தனர் இருப்பினும் பணத்திற்கு உரிய முறையான ஆவணம் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்

 

Categories

Tech |