நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 18_ஆம் தேதியும் , வேட்புமனு மீதான பரிசீலனை 19_ஆம் தேதியும் ,வேட்புமனுவை திரும்ப பெறுவது 22_ஆம்தேதியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 5_ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் எண்ணிக்கை 9_ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.