தமிழகத்திற்கு வாக்குச்சாவடி எந்திரங்கள் கூடுதலாக வர உள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்பதால் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சென்னைக்கு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்ற வீதம் அமைக்க தேர்தல் கமிஷன் சார்பில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கபடுவதால் அதற்கு தேவையான மின்னணு இயந்திரங்களும் கூடுதலாக வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட உள்ளன. இதனை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தமிழகத்தில் சுமார் 32 மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரம் சேமிப்பு கிடங்கு அமைப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்காக ரூபாய் 120 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக 7 கோடியே 16 லட்சமும், மதுரை மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்காக ரூபாய் 6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணியானது திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம் மற்றும் தேனி 16 மாவட்டங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மேலும் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று 31 மாவட்டங்களில் மார்ச் 31ஆம் தேதிக்குள் அதன் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான டெண்டர் முடிவுற்று கட்டுமான பணியானது துவங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 30,000 வாக்குசாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும் காரணத்தால் அதற்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுவதோடு, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அதனை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது வருகிறது.