Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. மேலும் சூலூர் தொகுதி MLA மாரடைப்பால் உயிரிழந்ததால் அதையும் சேர்த்து 4 சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் க்கான பட முடிவு

மேலும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டிய சட்டமன்ற தொகுதி வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, வருகின்ற ஏப்ரல் 22_ஆம் தேதி இடை தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் தொடக்கம் :

ஏப்ரல் 29_ஆம் தேதி  வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்

ஏப்ரல் 30_ஆம் தேதி  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மே 2_ஆம் தேதியை  வேட்பு மனுக்களை திரும்ப பெற காலஅவகாசம்

மே 19_ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு பதிவு

மே 23_ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |