உடுமலை சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் மற்றும் 87 துணை வாக்குசாவடிகள் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் ஒரு நுண் பார்வையாளர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட உள்ளார். இதனை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் 60 பேர் உடுமலை காவல் சரகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உடுமலை காவல் சரகம் உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சிறப்பு காவல்துறையினர் 30 பேர் வந்துள்ளனர்.