சட்டசபை தேர்தல் நடத்தப்பட்ட 5 மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பணி நடைமுறை பண்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு சென்றால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த பரிசுப் பொருள்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. ஆனால் மேற்கு வங்காளத்தில் தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிக்கை முதல் தேர்தல் முடிவு வரை பறிமுதல் செய்த பொருட்கள் மற்றும் பணம் குறித்த புள்ளிவிவரங்கள் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ரொக்கமாக 236 .69 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். ரொக்கமாக அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 5.77 கோடி ரூபாயும், அசாமில் 27.09 கோடி ரூபாயும், கேரளாவில் 2.58 கோடி ரூபாயும், புதுச்சேரியில் 5.62 கோடி ரூபாயும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்பின் மதுபான பறிமுதல் பட்டியலில் மேற்கு வங்காளத்தில் 30.11 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானமும், தமிழ்நாட்டில் 5.77 கோடி ரூபாய் மதிப்பிலும், கேரளாவில் 5.16 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானமும், புதுச்சேரியில் 0. 70 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பரிசுப் பொருட்களாக பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் மேற்கு வங்காளத்தில் 88. 39 கோடி ரூபாய் மதிப்பிலும், தமிழகத்தில் 25. 64 கோடி ரூபாய் மதிப்பிலும், அசாமில் 15 .18 கோடி ரூபாய் மதிப்பிலும், புதுச்சேரியில் 3.75 கோடி ரூபாய் மதிப்பிலும், கேரளாவில் 1.95 கோடி ரூபாய் மதிப்பிலும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.