Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 11, 77, 49, 062 கோடி ரூபாய்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

சென்னையில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11. 78 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி இரயில் நிலையம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ தங்கம், 46 கிலோ வெள்ளி போன்றவற்றை பறிமுதல் செய்து மாம்பலம்-கிண்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் இது வரை பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கம், வெள்ளி, குட்கா, ரேஷன் அரிசி போன்ற 11, 77, 49, 062 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |