Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுவரை கண்டிப்பா திறக்க கூடாது…. சீல் வைக்கப்பட்ட அலுவலகம்…. தீவிர கண்காணிப்பு பணி…!!

மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சியினரின் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர்.

இதனை அடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ-வின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சட்ட மன்ற அலுவலகத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |