Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல்…. “தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழு”… திமுக அறிவிப்பு..!!

திமுக சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தலில், தேர்தல் பணியாற்றிட தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழுவினரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.   

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக நாம் தமிழர்,தமிழ்நாடு காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

Image result for ஸ்டாலின் விக்கிரவாண்டி

திமுக சார்பில் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தியை  (வயது 66) வேட்பாளராக முக ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி  தேர்தலில், தேர்தல் பணியாற்றிட தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழுவினரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Categories

Tech |