Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#ElectionBreaking: குடும்பத்தில் 6 பேர்: வேட்பாளருக்கு கிடைத்ததோ ஒன்றே ஒன்று …!!

கோவை மாவட்டம் குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. தாய், தந்தை, மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஐந்து பேர் இருந்தோம் கார்த்திக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது . மொத்தம் 910 வாக்குகள் பதிவான நிலையில் திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

Categories

Tech |