வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.  140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல் முடிவில் திமுக கூட்டணி பிரமாண்டமான வெற்றியும், அதிமுக கூட்டணி படுதோல்வியும் அடைந்தது.

கட்சியின் பெயர் : மாவட்ட கவுன்சிலர் :  ஒன்றிய  கவுன்சிலர் / கட்சி அடிப்படையில்லாத பதவிகள்

கட்சியின் பெயர் கட்சி அடிப்படையிலான பதவிகள் கட்சி அடிப்படையில்லாத பதவிகள்
ஊரகம் ஊரகம்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சி தலைவர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
மொத்த பதவியிடங்கள் 107/153 1221/1421 2610/3007 17018/23211
போட்டி இன்றி தேர்வு 2 5 137 3221
போட்டி தேர்வு 105 1216 2473 13797
வேட்பு மனு தாக்கல் இன்மை / தேர்தல் நிறுத்தி வைப்பு 0 1 5 26
அ.இ.அ.தி.மு.க 1 186 0 0
அ.இ.தி.கா 0 0 0 0
பி.எஸ்.பி 0 0 0 0
பி.ஜே.பி 0 8 0 0
சி.பி.ஐ 0 3 0 0
சி.பி.ஐ(எம்) 0 4 0 0
தே.மு.தி.க 0 1 0 0
தி.மு.க 98 829 0 0
இ.தே.கா 7 31 0 0
என்.சி.பி 0 0 0 0
தே.ம.க 0 0 0 0
மற்றவை 1 159 2610 17018