Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: 118இல் முன்னிலை… அசால்ட்டாக அள்ளிய திமுக…. திக்கி திணறும் அதிமுக …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.  140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி திமுக 47 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும், அதிமுக 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.அதே போல 1381 ஒன்றிய கவுன்சில் பதவிக்கான இடங்களில் 118 இடங்களின் முன்னிலை விவரங்கள் வந்துள்ளது. இதில் திமுக 121 இடங்களிலும், அதிமுக 21 இடங்களிலும், பாமக 7இடங்களிலும்,  அமமுக 1இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர் பதவி முன்னிலை விவரம்;

விழுப்புரம்:

திமுக : 7

அதிமுக 4

காஞ்சிபுரம்:

திமுக 30

அதிமுக 4

பாமக 1

செங்கல்பட்டு:

திமுக 6

அதிமுக 0

மற்றவை 1

ராணிப்பேட்டை:

திமுக 15

அதிமுக 2

தென்காசி:

திமுக : 10

அதிமுக: 0

வேலூர்:

திமுக 18

அதிமுக 4

கள்ளக்குறிச்சி: 

திமுக 11

அதிமுக 0

திருப்பத்தூர்:

திமுக 5

அதிமுக 4

திருநெல்வேலி:

திமுக 13

அதிமுக 0

அமமுக: 1

 

Categories

Tech |