Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: எகிறி அடித்த காங்கிரஸ்…! பத்த வச்சு பறக்க விட்ட பாஜக… நொடிக்கு நொடி திக் திக் ..!!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் கிரீடம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வாக்குப்பதிவு எண்ணிக்கை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி,  முன்னணி நிலவரம் வெளியாகி கொண்டிருக்கின்றன.

குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை என்பது 33 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகின்றது. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இமாசல பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னணி பெற்ற நிலையில் தற்போது பாஜக மீண்டும் முந்துகின்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாஜகவே ஆதிக்கம் செலுத்திய நிலையில் பிறகு காங்கிரஸ் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலையில் பாஜகவே காங்கிரசை விட முந்திச் செல்கின்றது. தற்போதைய நிலையில் பாஜக 33 இடங்களிலும்,  காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |