குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள்.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் தேதி மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்தன. கருத்துக்கணிப்புகளில் பாஜக பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும் அப்படின்னு சொல்லப்பட்டது.
பல கருத்துக்கணிப்புகளில் அந்த விவரங்கள் கிட்டத்தட்ட ஒத்து போயிருந்தன. ஹிமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரைக்கும் ( பாஜகவுக்கும் காங்கிரசுக்கும்) இரண்டு பேருக்கும் நெருக்கடியான ஒரு போட்டி இருக்கும் அப்படின்னு சொல்லப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பு இருந்த ஆம் ஆத்மிக்கு அவ்வளவு இடங்கள் கிடைப்பதில்லை என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்தின.
கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய விவகாரங்கள் அப்படியே உண்மையாவதற்கான வாய்ப்புகள் இருக்கு என பாஜக தரப்பில் பெரும்பாலும் நம்புறாங்க. ஆனால் காங்கிரஸ், ஆம் ஆத்மியை பொருத்தவரைக்கும் முடிவுகள் மாறுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது நம்பப்படுகிறது. தற்போதைய நிலவரம் படி, இமாசலில் காங்கிரஸ் 35 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில் தற்போது காங்கிரஸ் பாஜகவை முந்துகின்றது.