10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி பொது முடக்கத்திற்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக இருப்பதால் அவர்கள் இ – பாஸ் எடுத்து மாணவியும், அவரது தாயாரும் ஒரு வாகனத்தில் கொடைக்கானல் திரும்பி உள்ளனர். அவர்களை கொடைக்கானலில் கொரோனா சோதனை செய்தபோது அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், தனிமைப்படுத்தி ஒருநாள் கழித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அதில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார். தற்போது அந்தமாணவியை மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் வாகன ஓட்டிக்கும் சோதனை மேற்கொண்டு கொடைக்கானல் நகரப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 10ஆம் வகுப்பு இன்னும் 11 நாளில் பொதுத்தேர்வு இருப்பது குறிப்பிடத்தக்கது.