அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவை அடுத்து தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கன்னியாகுமரி அரசியலில் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை.அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக உள்ள நான் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் என்று அகஸ்தீஸ்வரத்தில் பேட்டியளித்துள்ளார்.