சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து மீண்டும் சேவை தொடங்கப்பட்டது.