திடீரென மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி கிராமம் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். எனவே மிட்டஹல்லி துணை மின் நிலையத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவரது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து முருகேஷ் என்பவரது வீட்டில் விழுந்துவிட்டது.
இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜேஷ் வீட்டில் இருந்த நான்கு பேரும், முருகேஷ் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, மின்கம்பி பழுதடைந்ததால் தான் அறுந்து விழுந்து உள்ளது எனவும், மின் வாரிய அதிகாரியிடம் பழுதடைந்த மின் கம்பியை மாற்றக் கோரி பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.