மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பக்கமேடு கிராமத்தில் பாஸ்கரன் என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இரும்பு கடையில் இருந்து ஒரு பழைய சைக்கிளை வாங்கி அதில் கண்ட்ரோலர், மின் மோட்டார், பேட்டரி போன்ற 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை பொருத்தி பாஸ்கரன் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து பாஸ்கரன் கூறும் போது, இந்த சைக்கிளில் பொருத்தப்பட்ட பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் போட்டால் சுமார் 30 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைப்படாமல் பெடல்களை மிதித்து சைக்கிளை தொடர்ந்து இயக்கலாம் என பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.