எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 1\2 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பர்வேஷ்குமார் என்பவர் வேலைபார்த்து வந்தார். இவர் ரூ.7 1\2லட்சத்தை திருடி தனது நண்பரிடம் கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பர்வேஷ்குமாரை கைது செய்ததோடு தலைமறைவான அவரது நண்பரையும் பிடிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர்