டிராக்டரில் வைக்கோல் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது மின்கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் குப்பன் என்பவரின் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென உயர் அழுத்த மின்கம்பி டிராக்டர் டிப்பர்யில் இருந்த வைக்கோலின் மீது உரசியதால் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டிராக்டரில் இருந்தவர்கள் டிப்பரையும் டிராக்டரையும் தனியாகப் பிரித்து விட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்துள்ளனர்.