Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. சடலமாக தொங்கிய எலக்ட்ரீஷியன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பிரபாகரனின் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |