மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியங்குப்பம் பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் எலக்ட்ரீசியன் பாபு என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி இம்தியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.