Categories
உலக செய்திகள்

‘ஆண்மை நீக்க சிகிச்சை’…. எலக்ட்ரீசியனால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு….!!

எலக்ட்ரீசியன் செய்த அறுவை சிகிச்சையினால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியிலுள்ள Markt Schwaben நகரை சேர்ந்த ஒருவர் தன் கடனை அடைப்பதற்காக மருத்துவர் போல வேடமிட்டுள்ளார். மேலும் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 8 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக அந்த எட்டு பேருக்கும் சமையலறை மேஜையில் வைத்து ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இறந்து போயுள்ளார். இதனை அடுத்து அவரது உடல் மூன்று வாரங்களாக ஒரு பெட்டிக்குள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் இறந்து போனவரை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்தவர் ஒரு எலக்ட்ரீசியன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இறந்து போனவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த எலக்ட்ரீசியன் உதவி அளிக்காததால் அந்த நபர் மரணமடைந்துள்ளார். இதனால் அந்த எலக்ட்ரீசியன் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு முனிச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதிலும் அந்த எலக்ட்ரீசியன் கூறியதில் ‘தன்னை இணையம் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்கள் தான் அறுவை சிகிச்சைக்காக என்னிடம் வந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |