Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் எலக்ட்ரீசியனான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அருண்குமாருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |