மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் புல் அறுப்பதற்காக அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து நாகம்மாள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சிலர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த உறவினர்கள் நாகம்மாளின் உடலை கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி காவல்துறையினர் நாகம்மாளின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தர்மபுரி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.