80 கோடி மின்கட்டணம் வந்ததால் முதியவர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கில் உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே மின் கட்டணம் குறித்து பல குளறுபடிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பல்வேறு மின் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்கட்டணத்தை வைத்து ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருடைய வீட்டில் 80 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது.
இதைப்பார்த்த முதியவர் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடைய சீரான உடல்நிலையில் சீர்குலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். மின் கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக முதியவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.