Categories
மாநில செய்திகள்

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது – அமைச்சர் தங்கமணி…!!

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரவாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், மின் வாரிய அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகிறது என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். கேங்க்மன் பணி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பத்தாயிரம் கேங்க்மன் பணியிடங்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் உடனே கேங்க்மன் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |