Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

முடியவே முடியாது…! அப்படி மட்டும் செய்யாதீங்க… அரசின் முடிவுக்கு எதிராக போராட்ட அறிவிப்பு …!!

மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மின்துறை தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் அறிக்கையில் கூறும்பொழுது, கடந்த ஆண்டு மே மாதம் மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மின் துறையை தனியார்மயமாகவோ, கார்ப்பரேஷனாகவோ மாற்றக்கூடாது என போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

அதன்பின் தொழிற்சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சட்டசபை கூட்டத்தில் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி முடிவின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட கடிதத்தில் புதுவை மின் துறையை கார்ப்பரேஷன் அல்லது தனியார் மயமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  எடுக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்து சங்கங்களும் கடந்த 24ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கான கடிதத்தை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.  இதன்படி வருகின்ற திங்கட்கிழமை காலை 9 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மின் துறை தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் மின் துறை என்பது நுகர்வோரின் பொது சொத்து அதை தனியார் மயமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே மின் துறையின் இந்த போராட்டத்தை புதுவை மக்களின் ஒட்டுமொத்த போராட்டமாக கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |