Categories
தேசிய செய்திகள்

தனி தனியாக அணுக வேண்டும்…. மின் கணக்கீடு மேல்முறையீடு வழக்கு…. அதிரடி உத்தரவு…!!

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்ட மின்சார அளவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டிய மின் கணக்கீட்டானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகரித்ததோடு, இதில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு எடுக்க உத்தரவிட கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து எம்.எல். ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு குழு இதனை விசாரித்தது. இதனையடுத்து தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரியதை அடுத்து நீதிபதிகள் அதனை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

Categories

Tech |