Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஓய்வுக்கு 1 ஆண்டுதான் இருக்கு…. இப்போ இப்படி பண்ணுறாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்….!!

மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மின்வாரியத்தில் சிறப்பு நிலை ஆக்க முகவராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன். இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர் பணி ஓய்வு பெற இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் அவரை கீரனூர் கோட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர்.

இந்த உத்தரவை பிறப்பித்த புதுக்கோட்டை மின்சார மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் ஆகியோரை கண்டித்தும் பாஸ்கரின் பணியிடமாற்றம் உத்தரவை திரும்பப் பெறக் கோரியும் புதுக்கோட்டை மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் போராட்டக்குழு தலைவர் திவ்யநாதன் தலைமை தாங்கி செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்து நிர்வாகிகள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பாஸ்கரனின் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |