தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல் 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணமும் உயர்ந்ததால் மக்கள் மேன்மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. அதன் பிறகு மின் கட்டண உயர்வால், இலவச மின்சாரம் பெறுபவர்கள் தவிர அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
இதை தொடர்ந்து 2 மின்சாரங்களை பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 27.50 காசுகளும், 500 அலகு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.19 ரூபாயும், 900 அலகு பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.25 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஜெராக்ஸ் கடைகளில் கட்டணமானது அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஒரு பேப்பருக்கு 2 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 4 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஜெராக்ஸ் கட்டணத்தின் உயர்வால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.