மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட துணைத்தலைவர் விஜயன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜீவா, நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
பிறகு முத்தரப்பு ஒப்பந்தத்தின் படி ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின் வாரியமே தினக்கூலியாக 350 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கலர் பிரிவில் உள்ள காலி பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நியமித்து பணி நியமனம் செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மின் விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கருணை தொகை மற்றும் வாரிசுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விரிவாக்கப் பணி மற்றும் திட்ட பணிகளில் தொழிலாளர்களுக்கு உரிய பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.