சீனாவால் உருவாக்கப்பட்ட மின்மயமாக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் திபெத் நாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சீனா வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருக்கவும் முடிவெடுத்துள்ளதால் முதல் புல்லட் ரயில் சேவையை திபெத் நாட்டில் ஆரம்பித்துள்ளது. மேலும் திபெத் நாட்டை சீனாவின் வர்த்தக நகரமான சிசுவான் பகுதியிலிருந்து இணைக்கும் லாசா-யிங்சி வரை 435.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் வழித்தடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. திபெத் நாட்டின் எல்லை பகுதி தான் இந்திய எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கும் யிங்சி பகுதி.
ஏற்கனவே இந்தியா-சீனா இடையே பிரச்சினைகள் இருந்து வரும் சூழலிலும், திபெத் நாட்டில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த புல்லட் ரயில் திட்டமானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திபெத் நாட்டை சீனாவின் சிசுவான் பகுதியிலிருந்து இணைக்கும் புதிய ரயில்வே திட்டம் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் எல்லை பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று சீன பிரதமர் ஜி ஜின்பிங் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார். இந்த ரயில் திட்டமானது சீனாவின் செங்குடு பகுதியில் தொடங்கி யானன் வழியாக சென்று திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசாவை சென்றடைகிறது. இதன்மூலம் 48 மணி நேர பயணமானது 13 மணி நேரமாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.