Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயிரை பாதுகாக்க மின்வேலி…. மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்….. ஈரோட்டில் சோகம்…!!

ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர்  ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில்  தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தோட்டத்திற்கு சென்று பார்த்த மனைவி அவர் வேலி கம்பியில் தலைகீழாக கவிழ்ந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, 

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தங்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, அதனை வாங்க மறுத்து உறவினர்கள், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பதற்காக கம்பி வேலியில் மின்சாரத்தை வைத்துள்ளார் பக்கத்து தோட்டக்காரர்.

இதில்  தண்ணீர் பாய்ச்சும் போது தவறி விழுந்து தங்கவேல் உயிரிழந்துள்ளார். எனவே கம்பியில் மின்சாரம் பாய்ச்சிய தோட்டக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முறையாக புகார் அளியுங்கள் அதன்பின் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதன் பேரில் உடலைப் பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |