Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி மரணம்…… ஊரடங்கு தான் காரணம்….. கிராம மக்கள் புகார்….!!

கோவையில்  காட்டுயானை தாக்கி கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி ஏரியாவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் தனது வீட்டில் GAS  பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பில் சமைக்க காய்ந்த விறகுகளை சேகரிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இவர் சென்றது அதிகாலை நேரம் என்பதால்,  அங்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. காய்ந்த விறகுகளை பொறுக்குவதில் அய்யாசாமி கவனம் செலுத்திய போது,  காட்டு யானை திடீரென பிளிறியபடி அய்யாசாமியை நோக்கி ஓடிவந்தது.

இதையறிந்ததும் அலறியடித்தபடி ஓட முயற்சிப்பதற்கு முன் காட்டு யானை அவரை தாக்கியதுடன், தும்பிக்கையால் பிடித்து சுழற்றி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் இதுகுறித்து வனத்துறையினருக்கு தடாகம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஊரடங்கு முன் வரை இங்கு காட்டு யானைகள் நடமாட்டம் இல்லை. முன்பு ஒரு காலத்தில் இருந்தது ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அவைகள் அதிகமாக குடியிருப்பு வளாகத்தில் வருவதில்லை. தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளதால் காட்டு யானைகள் குடியிருப்பு வளாகத்திற்குள் வரத் தொடங்கிவிட்டன என்று அச்சத்துடன் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |