Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த இடம் ஏற்கனவே அத்துப்படி தான்… களமிறங்கும் மற்றொரு கும்கி யானை… ஆர்வமுடன் காத்திருக்கும் வனத்துறையினர்…!!

சேரம்பாடியில் அட்டகாசம் செய்ததால் பிடிக்கப்பட்ட சீனிவாசன் என்ற யானை தற்போது கும்கி யானையாக மாற்றப்பட்டு, ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக அதே பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடியில் 3 பேரை கொடூரமாகக் கொன்றுவிட்டு ஒற்றைக் கொம்பன் யானை அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதன் பிறகு கேரள வனப்பகுதியில் இருந்த இந்த யானையை தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த யானை மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு திரும்பி விட்டது. இந்த காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள், டாப்சிலிப்பில் இருந்து ஒரு கும்கி யானை என மொத்தம் 5 யானைகள் ஒற்றை கொம்பன் யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். இந்நிலையில் ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொம்மன் என்ற கும்கி யானையின் கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொம்மன் என்ற என்ற கும்கி யானையால் ஒற்றை யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட முடியாத காரணத்தால், முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற மற்றொரு கும்கி யானை சேரம்பாடி பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

இந்த சீனிவாசன் யானையின் சிறப்பு என்னவென்றால், கடந்த 2016ஆம் ஆண்டு இதே சேரம்பாடி பகுதியில் சீனிவாசன் யானையானது அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின்னர்  வனத்துறையினர் போராடி சீனிவாசன் யானையை பிடித்து விட்டனர். இவ்வாறாக ஒற்றைக் கொம்பன் யானை சுற்றி வரும் யானை கூட்டத்திலிருந்து பிடிக்கப்பட்ட இந்த சீனிவாசன் யானையானது, தற்போது சங்கர் என அழைக்கப்படும் ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக சேரம்பாடி பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. எனவே ஒற்றை கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் சீனிவாசன் கும்கி யானையானது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பதற்காக வனத்துறையினர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Categories

Tech |