பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானை விவசாய பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்துள்ளனர்.
அதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த யானையை வனத்துறை அதிகாரிகள் ஜக்கனாரி வனப்பகுதியில் தீவிரமாக கண்காணித்த போதிலும் பாகுபலியை பிடிக்க இயலவில்லை. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த உடன் ரேடியோ காலர் பொருத்த உள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக மற்றொரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.